சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மிகப்பெரிய வெற்றிப்படமான 16 வயதினிலே படத்தை இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் மறக்க முடியாது.
தமிழ் சினிமாவை 16 வயதினிலே படத்துக்கு முன், பின் என்று பிரித்துக் கொண்டு தான் சினிமாக் களை அளவிட முடியும். இயக்குநர் பாரதிராஜா வின் முதல் படம். இயக்குநர் பாக்யராஜ் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் படம்.
இளையராஜா பாடிய முதல் படம். கமலுக்கும் ரஜினிக்கும் இளையராஜா இசையமைத்த முதல் படம் என பல முதன்மைகளை கொண்ட 16 வயதினிலே கொடுத்த தாக்கம் மிகப்பெரியது.
பல வருடங்களானாலும் தலைமுறை கடந்தாலும் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என கதா பாத்திரங்களும் அந்தப் பெயர்களும் மனதில் பச்சைக்குத் தப்பட்ட விஷயங்கள்.
எல்லாப் பாடல்களும் ஹிட். சப்பாணியாக கமல் அசத்தி யிருப்பார். பரட்டையாக ரஜினி மிரட்டி யிருப்பார். இன்றைக்கு பஞ்ச் டயலாக் என்பது வெகு பிரபலம். ஆனால் அப்போதே, ரஜினி சொன்ன பஞ்ச் டயலாக்… இதெப்படி இருக்கு?
எல்லாப் பாடல்களும் ஹிட். மனதை வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இசை. குறிப்பாக, பின்னணி இசையில் உச்சம் தொட்டிருப்பார் இளையராஜா. எஸ்.ஏ. ராஜ் கண்ணு தயாரித்த இந்தப் படம் சில்வர் ஜூப்ளி என்று சொல்லப் படும் 175 நாட்களைக் கடந்தும் ஓடியது.
இந்த 16 வயதினிலே படத்துக்கு ரஜினியின் சம்பளம் 3 ஆயிரம் மட்டும்தான். கமலுக்கு 29 ஆயிரம். ஸ்ரீதேவிக்கு ஆறாயிரம். படத்தின் செலவு மொத்தமே ஐந்து லட்சம் என்று ஒரு விழாவில் பாரதிராஜா சொன்ன போது எல்லோருமே வியந்து தான் போனார்கள். ஆனால் இன்றைக்கு ரஜினி மிகப்பெரிய ஸ்டார். சூப்பர் ஸ்டார். இன்றைய சம்பளம்? கேட்டால் மிரண்டு தான் போவோம்!