ரணில் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!
மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு கோரி ரணில் விகரமசிங்க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயர்நீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்துள்ளது.
இந்நிலையில், மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனு மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் புதிய அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அதற்கெதிராக மஹிந்த தரப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்டு இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதிமன்ற குழாமை நியமிக்குமாறு வலியுறுத்தி ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணியால் நேற்று குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.