பாலா அண்ணா கூறிய பல விடயங்களை அம்பலப்படுத்துவேன்!
தன்னுடைய மனதிலே கொதித்துக் கொண்டிருந்த திருப்திகளை, அதிருப்திகளை, தன்னால் செய்ய முடியாமல் போனவற்றை பால அண்ணா, என்னோடு பகிர்ந்து கொண்டார் என மூத்த ஊடகவியலாளராக ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காலம் வரும் போது தமிழ் மக்களோடு அதனை பகிர்ந்து கொள்வேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
என்ன காரணத்திற்காக பாலா அண்ணா பல விடயங்களை மறை பொருளாக வைத்திருந்தார். நான் நினைக்கிறேன் அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என.
அத்துடன் அவை பகிரப்படவேண்டிய தேவையும், வேளையும் இன்னும் வரவில்லை. அதனால் அவற்றை நான் பகிரவில்லை என கூறியுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் போராட்டம் பின்னடைவு கண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாலசிங்கம் என்ற நபரை கடவுள் அனுப்பி வைத்தார் என என்னால் நிரூபிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.