எதிர்கட்சி தலைவர் பதவியை மகிந்தவிற்கு வழங்க கோரிக்கை!
மகிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் பதவியை பெறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் பதவியை மகிந்த ராஜபக்சவிற்கே வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவிற்கு 101 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மகிந்த ராஜபக்சவும் சிறிசேனவும் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் அவர்கள் ஜனநாயக சக்தியாக எதிரணியில் அமர்வது எனதீர்மானித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதே கருத்தை வெளியிட்டுள்ள எஸ் பி திசநாயக்க தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஐக்கியதேசிய கட்சியின் விருப்பங்களிற்கு ஏற்ப செயற்படுவதால் அவர்களிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வகிப்பதற்கான உரிமை கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.