“ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நாம் தயாரில்லை”
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட குழு தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியினரின் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதே அவர் இதனை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் புரிந்துணர்வுடன் அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தங்களது எதிர்பார்ப்பு என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.