ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவித்தார் மஹிந்த!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி கூறி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதம் வருமாறு…
எமது நாடு பொருளாதார, தேசிய ரீதியில் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்த தருணத்தில் அதிலிருந்து தாய் நாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாக என்னை பிரதமர் பதவியில் அமர்த்தியமைக்காக நான் நன்றி பாராட்டுகின்றேன்.
பிரதமராக நியமித்தது முதல் இதுவரையில் நாட்டின் அனைத்து இன சமூகங்களுக்காவும் எனது இயலுமையின் அடிப்படையில் உச்ச அளவில் சேவையாற்றியுள்ளேன்.
எனினும், நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியனவற்றுக்கு இடையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளை ஏற்படுத்தி நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர்.
இந்த சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு எடுக்கும் முதல் படிமுறையாக எனது மனச்சாட்சியின் அடிப்படையில் தீர்மானம் எடுத்தேன்.
எனது அரசியல் வாழ்க்கையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுள்ளேன், அதன் அடிப்படையில் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் பதவியை துறக்கின்றேன்.
கடந்த ஒன்றரை மாத காலமாக பிரதமராக நாட்டை பாதுகாப்பதற்கு நீங்கள் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுவதுடன், எங்கள் மீது நம்பிக்கைக் கொண்ட அனைத்து பிரஜைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.