புதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை!
புதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இன்று(ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இருவேறுப்பட்ட கருத்துக்கள் அல்லாத ஒரே கொள்கையுடைய ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கமே உருவாக்கப்படும்.
30 அமைச்சுக்கள் மாத்திரேம கொண்டு உருவாக்கப்படும் புதிய அமைச்சரவையில் சூழ்ச்சிக்காரர்களுக்கு இடமில்லை.
அத்துடன் அமைச்சரவைக்கென ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அமைச்சர்களக்கு வழங்கப்படும் வாகனங்கள், வெளிநாட்டு பயணத்துக்காக சலுகைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப்பட வேண்டும்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.