இலங்கையில் அரசியல் நெருக்கடி தொடரும்!
இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றபோதும் அடுத்து வரும் இரண்டு வருடக்காலம் தீர்மானமிக்கதாக இருக்கும் என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும். பொதுத்தேர்தல் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டும்.
இதற்குள் மாகாண சபை தேர்தல்களும் நடத்தப்பட வேண்டியுள்ளன. இந்தநிலையில் குறித்த மூன்று தேர்தல்களிலும் மூன்று முக்கிய கூட்டமைப்புக்கள் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் தற்போது இலங்கை அரசியலில் முன்னிலை வகிக்கின்றன.
எனினும் இந்த கட்சிகள், பெரும்பாலும் தேர்தல்களில் போட்டியிடும்போது பாரிய கூட்டமைப்பை அமைத்துக் கொண்டே போட்டியிடும் என்றும் தெ ஹிந்து எதிர்வுக்கூறியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் அரசியல் இன்னும் சில மாதங்களில் மீண்டும் பின்னடைவை காணும் என்று அரசியல் விமர்சகர்களை கோடிட்டு தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.