கிளிநொச்சியில் பொலிஸ் பிக்கப் மோதியதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில்
நேற்று இரவு (2018.12.16) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் ஒன்று வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர் 52 வயதான கட்டன் திக்கோயா பிரதேசத்தை சேர்ந்த பு.பாலசுபிரமணியம் எனத் தெரிய வருகின்றது
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது யாழ்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ராட்டா ரக பிக்கப் வீதியை கடக்க முயன்ற ஒருவரை மோதியதிலையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது அருகில் இருந்த பாலத்தில் வாகனம் மோதியதில் வாகனமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது
வாகனத்தை ஓடிய பொலிஸ் சாரதி கிளிநொச்சிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்