பனி படர்ந்த தடகள திடலில் சாகச அஞ்சல் பனிச் சறுக்கல் ஓட்டம்!
உலகம் முழுவதிலும் இருந்து வந்த தடகள போட்டியாளர்கள் ஒஸ்ட்ரியாவில் பனிபடர்ந்த தடகள திடலில் ஒன்று கூடிய சாகச அஞ்சல் போட்டியில் ஈடுபட்டனர்.
கடந்த சனிக்கிழமை தொடக்கம் வாரயிறுதி நாட்களில் ஒஸ்ட்ரியாவின் பனி படர்ந்த மைரோஃபென் பகுதியில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் இந்த பனிச் சறுக்கல் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
அஞ்சல் பனிச் சறுக்கல் போட்டிக்கு மேலதிகமாக பராசூட் மூலமாக பனி படர்ந்த மலைப் பகுதியிலிருந்து தாழ் நிலங்களுக்கு சறுக்கிச் செல்லும் போட்டிகளும் நடைபெற்றன.
இந்த போட்டிகள் மிக கடினமாக இருக்கின்ற போதும் சில கட்டுப்பாடுகளுக்கு மத்திலேயே விளையாடப்பட வேண்டும்.
குறிப்பாக 1.4 கிலோமீற்றர் உயரமுள்ள மலைப்பகுதியிலிருந்து கீழ் நோக்கிய சரிவில் சறுக்கிச் செல்வதும், பராசூட்டின் மூலமாக காற்றில் சறுக்கிச் செல்வதும், மவுன்டேன் சைக்கிள்களின் உதவியுடன் சுமார் 3.7 கிலோமீற்றர் தொலைவை கடந்து செல்வதும் இந்த போட்டிகளின் விசேட அம்சமாகும்.
இந்த போட்டிகளில் குறைந்தது 85 அணிகள் பங்கேற்கின்றன. குழு நிலையில் இடம்பெறும் பெரும்பாலான போட்டிகளுக்கு நேர அளவீடும் வழங்கப்படுகின்றது.
7 வது அத்தியாயமாக இந்த போட்டிகள் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்ற நிலையில், 8 ஆம் அத்தியாயம் அடுத்தவருடம் டிசம்பர் 14 ஆம் திகதி ஒஸ்ட்ரியாவின் பனி படர்ந்த மைரோஃபென் பகுதியிலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.