புதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்!

புதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்!

புதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுமென்றும், ஒவ்வொரு ஊடகங்களையும் தனித்தனியாக கண்காணிக்கும் வகையில் அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் உள்ள அவரது கால்டன் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“புதிய அரசாங்கத்தில் நாடு துண்டாடப்படும் அதிலிருந்து ஊடகத்துடன் இணைந்து நானும் நாட்டை பாதுகாப்பேன்.

நாங்கள் ஆட்சி செய்த காலத்தில் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ பதவி வகித்த நேரங்களில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே கடன் வாங்கினோம்.

நாம் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் எரிபொருளின் விலையினை குறைத்தோம், நிவாரணம் வழங்கினோம். ஆனால், இவர்கள் எரிபொருளின் விலையை உயர்த்தியுள்ளனர், பிணைமுறி மோசடியில் ஈடுபட்டனர்.

அத்தோடு மத்தள விமான நிலையம், துறைமுகம், அதிவேக நெடுஞ்சாலை போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நாட்டில் 35ஆயிரம் நிலபரப்பை வெளிநாட்டு இராணுவ முகாம்களுக்கும் வழங்க சூழ்ச்சியும் செய்துள்ளனர்“ என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Copyright © 1549 Mukadu · All rights reserved · designed by Speed IT net