ரணில், பிரதமராக நியமித்தமையை வர்த்தமானியில் வெளியிட்ட ஜனாதிபதி!

ரணில், பிரதமராக நியமித்தமையை வர்த்தமானியில் வெளியிட்ட ஜனாதிபதி!

கடந்த சில காலங்களாக அரசியலில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே பதவியேற்றுக்கொண்டார்.

நேற்று முன்தினமான சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமர் பதவியை இராஜனாமா செய்ததையடுத்தே, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

அத்தோடு, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்து உரையாற்றும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டிருந்தையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net