கிளிநொச்சி தொலைபேசி விற்பனை நிலையத்தில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி தொலைபேசி விற்பனை நிலையத்தில் களவாடப்பட்ட பொருட்கள் மீட்பு

கடந்த 06.12.2018 அன்று கிளிநொச்சி நகரில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் களவாடப்பட்ட பெரும் தொகைப் பொருட்கள் பொலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

களவு சம்பவத்தின் போது சிசிரிவியில் பதிவான காட்சிகளை ஆதரமாக வைத்துக்கொண்டு கிளிநொச்சி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, இரண்டு சந்தேக நபர்களும் கைத செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்தொலைப்பேசி 43, சாச்சர்கள் 10, கடையின் கதவை உடைப்பதற்கு பயன்டுத்தப்பட்ட அலவாங்கு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை நீதி மன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி பொலீஸார் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net