தேசிய அரசாங்கம் இனி இல்லை!

தேசிய அரசாங்கம் இனி இல்லை!

நாட்டை ஆட்சி செய்வதற்கு தனிநபர்கள் இருவர் இணைந்து கொண்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படபோவதில்லை.

ஆகையால் தேசிய அரசாங்கமென்ற ஒன்று இனியில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“2015 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற தேசிய அரசாங்கத்திலிருந்து கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகியுள்ளது.

அந்தவகையில் அரசாங்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சி இருந்தாலும் ஆட்சி அதிகாரம் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே காணப்படும். ஆகையால் அக்கட்சி பலமற்ற முறையிலேயே இனி இயங்கப்போகின்றது.

அதாவது கடந்த 3 வருட ஆட்சி காலத்தில் ஐ.தே.க.வினருக்கு ஜனாதிபதி அதிக இடமளித்திருந்தார். ஆனால் இனி இடம்பெறவுள்ள ஆட்சியில் அவர்கள் விருப்பப்படி எதனையும் செய்வதற்கு அனுமதி வழங்கமாட்டார்.

இதனால் ஐ.தே.கவின் புதிய லிபரல்வாத கொள்கைக்கு ஜனாதிபதி தடைகளை விதிப்பார்” என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Copyright © 9506 Mukadu · All rights reserved · designed by Speed IT net