ஸ்ரீ லங்காவை ICCக்கு பரிந்துரைக்க பிரிட்டனில் தொடரும் போராட்டம்!

ஸ்ரீ லங்காவை ICCக்கு பரிந்துரைக்க பிரிட்டனில் தொடரும் போராட்டம்!

எதிர்வரும் 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கிற ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) பரிந்துரை செய்யக்கோரியும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்யக்கோரியும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது.

அந்த வகையில் Roehampton and Southfields தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Justine Greening MP அவர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையில் டிசம்பர் 17ம் திகதி சந்திப்பொன்று நடைபெற்றது.

நாடு கடந்த தமிழீழ அரசின் மனித உரிமைகள் அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன் மற்றும் விளையாட்டு மற்றும் சமுக நலன் பேணும் பிரதியமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கத்தினுடைய நெறிப்படுத்தலில் நுஜிதன் இராசேந்திரம், திலக் அன்றூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த சந்திப்புக்களில் யுத்த குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் இலங்கை பிரதமராக பதவியேற்றமை தொடர்பாகவும், தற்போது ஏற்பட்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மற்றும் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 21 குழந்தைகள் உட்பட 276 மனித புதைகுழி தொடர்பாகவும், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தமை உட்பட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப் பட்டதுடன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (international criminal court) பரிந்துரைப்பதற்கான மனுவொன்றும் கையளிக்கப்பட்டதுடன் இலங்கையின் நீதிப்பொறியமைவுகjளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான சர்வதேச நிபுணர் குழுவின் ( Sri Lanka Monitoring and Accountability Panel) அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள பிரச்சனைகளை தொடர்ச்சியாக கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் வருகின்ற இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இந்த விடயம் தொடர்பாக கேள்விகளை முன்வைப்பதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6285 Mukadu · All rights reserved · designed by Speed IT net