இந்தியாவும் தென்கொரியாவும் இணைந்து பணியாற்ற இணக்கம்!
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கங் குயுங் வா இன்று (புதன்கிழமை) இந்திய வெளிவிவார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
குறிப்பாக வெளிவிவகார அமைச்சர் சுஸ்மாவை சந்தித்த பின்னர் இருவரும் இணைந்து நடத்திய கூட்டு ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதி தொடர்பாக இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
அத்தோடு, பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உறுதித்தன்மையில் இரு நாடுகளும் பரஸ்பர மற்றும் வெளிப்படை தன்மையுடன் பணியாற்ற இணக்கம் கண்டுள்ளதாக இரு நாட்டு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் 11 வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
தென்கொரிய ஜனாதிபதி முன் ஜே இன், எதிர்வரும் ஜுலை மாதம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தென்கொரிய அமைச்சரின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.