ஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது!
பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை உட்பட பத்திரிகையாளர்கள் மீது உலகெங்கும் நடத்தப்பட்ட வன்முறை ஊடகங்கள் மீதான வெறுப்புணர்வை பிரதிபலிப்பதாகவும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் குறைந்தது 63 தொழில்முறை பத்திரிகையாளர்கள் தமது வேலையை செய்த காரணத்துக்காக கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இவ்வமைப்பு கடந்த வருடத்தைவிட இந்த எண்ணிக்கை 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளும், பத்திரிகையாளர்கள் பணிபுரிவதற்கு மிக ஆபத்தான நாடுகளாக இவ்வமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் 348 ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடக சுதந்திர அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனா, துருக்கி, ஈரான், சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலேயே அதிகளவிலான பத்திரிகையாளர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.