சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள ரணில்!
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை பட்டியலில் ரவி கருணாநாயக்கவுக்கும் பாலித ரங்கே பண்டாரவுக்கும் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் அமைச்சரவையை 30 ஆக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைப்படி மனோ கணேசன், மலிக் சமரவிக்கிரம மற்றும் ரிசாத்
பதியுதீன் ஆகியோர் தாம் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று அமைச்சரவை பட்டியலை நிறைவு செய்ய முடியாமை காரணமாக இன்று அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சரவை அமைச்சர் பதவியை கேட்டு வருவதால் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு சில விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட உறுப்பினர்களிடம் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.