மட்டக்களப்பு பொலிஸார் படுகொலை நாட்டை குழப்பும் செயற்பாடு!
மட்டக்களப்பில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட போதிலும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டை குழப்பும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற குறித்த படுகொலைக்கு மன்றில் கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சிலரால் இச்செயற்பாடு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றும் ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.