மரணித்தும் உலகை பார்க்கும் சபாநாயகரின் பெற்றோர்!
மரணித்த போதும் தனது பெற்றோர் உலகை பார்த்துக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோர் தங்கள் கண்களை தானம் செய்தமையினால் அவர்களின் கண்கள் ஊடாக இருவர் இந்த உலகை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த பின்னணியாக இருந்தாலும் உடற்பாகங்களை தானம் செய்ய வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற கண் தான நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கண்கள், இரத்தம், சிறுநீரகம் தானம் வழங்குவதற்கு மேலதிகமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி தானம் ஒன்றை தனது மகள் பெயரில் ஆரம்பித்தேன்.
அதற்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியமடைய செய்தது. இதன்மூலம் இலங்கையிலுள்ள தியாக குணமுடைய மக்களை நன்றாக உணர முடிவதாக குறிப்பிட்டார்.
தனது பெற்றோர் உயிரிழப்பதற்கு முன்னர் தங்கள் கண்களை தானமாக வழங்க எழுதி வைத்தனர்.
அதற்கமைய இன்று இருவர் உலகின் வெளிச்சத்தை பார்க்கின்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் உலகை பார்க்கின்றார்.
அதேபோன்று இலங்கையர்கள் தானம் வழங்க முன்வர வேண்டும் என சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.