முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு !

முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் காட்டுப்பகுதியிலிந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது

இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5 81 மில்லிமீட்டர் எறிகணை -01 81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் பி ஜி -1 என்பனவே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பிரதேச கட்டளை அதிகாரி உதவி பொலிஸ் அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியின் தலைமையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net