வவுனியாவில் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு!
வவுனியாவில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காலை எட்டு மணி வரையில் வவுனியாவில் உள்ள சில பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
இதனால் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குவதாக தெரியவருகிறது.
அதிகாலையில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக குளிரான காலநிலை நிலவுவதால் மக்களின் இயல்புநிலையும் பாதிப்படைந்துள்ளது.