வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!
வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோவும் 330 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பென் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.