12 வருடங்களுக்கு பின்னர் தரமுயர்த்தப்பட்ட வாசிகசாலை!
2006ஆம் ஆண்டு கிண்ணியா நகரசபை எல்லைக்கு உட்பட்ட மகரூப் நகரில் ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலையானது 12 வருடங்களின் பின்னர் தற்போது நூலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்று கிண்ணியா நகரசபை உறுப்பினர் அனீஸ் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா மகரூப் நகர் வாசிகசாலை தேசிய நூலக ஆவணமாக்கல் சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு, நூலகத்தரம் 3ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நூலகம் தரம் உயர்த்தப்பட்டதால் 5 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த நூலகத்தில் 150 மாணவர்கள் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.