கிளிநொச்சியில் 153.8 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
இன்று(20.12.2018) மாலை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்ப்பட்ட D3,பன்னங்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 152 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப் படைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை முற்றுகை இட்டு சோதனை செய்த பொழுது 29 பொதிகளில் இருந்த 153.8 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பத்து லட்சம் ரூபா பணமும் சந்தேக நபர் பாவித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது
சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் அதிரடிப் படையினர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்த உள்ளனர் நாளை அவர்களையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பொலிசார் ஆயர்ப்படுத்த உள்ளதாகவும் அறிய முடிகின்றது என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.