மிக மோசமாக காணப்படும் கிராஞ்சி வீதி!
மிக மோசமான நிலையில் கிராஞ்சி வீதி காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பூநகரி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதி புனரமைக்கப்பட்டபோதிலும், முறையான கண்காணிப்பு இல்லாமையால் குறிப்பிட்ட சில காலங்களிலேயே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியை பயன்படுதத முடியாத நிலை தற்போது காணப்பட்டுள்ளதாகவு்ம, அவ்வீதியில் பயணிக்கும்போது பல்வேறு ஆபத்துக்கis எதிர்கொள்வதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வீதி கடுமையாக சேதமடைந்துள்ளமையால் பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்வதிலும் பெரும் சிரமங்கள் காணப்படுகின்றது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்பகுதியில் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதேச சபை பொறுப்பேற்றதன் பின்னரும் பல தடவைகள் குறித்த விடயம் தொடர்பில் மக்களால் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் பேருந்தில் பயணம் செய்த முதியவர் ஒருவர் அண்மையில் கீழே விழவேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு பல சம்பவங்கள் அன்றாடம் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு எந்தவொரு நபரும் ஆர்வம் காடடவில்லை எனவும், தேர்தல் காலங்களில் மாத்திரம் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள், தாம் அன்றாடம் அச்சமின்றி பயணிப்பதற்கு அவ்வீதியை உடனடியாக செப்பனிட்டு தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.