அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்குத் தயார்!

அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்குத் தயார்!

கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பொது மக்களுக்கான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில இன்று இடம்பெற்ற இடைக்கால கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் பிரதமர் உரையாற்றினார்

நாட்டின் நிதி நிர்வாகத்தை மேற்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உண்டு. கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் பிரச்சினை காரணமாக பல அத்தியாவசிய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்தன.

கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை காரணமாகவே இடைக்கால கணக்கறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

கம்பெரலிய உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கடந்த மாதங்களில் இடை நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை உரிய அமைச்சர்கள் மூலமாக மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net