கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஒளிவிழா நிகழ்வு நேற்று வியாளக்கிழமை இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக ஊழியர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்வுகளும் மண்டபத்தை அலங்கரித்தன.
இந்நிகழ்வில் பாலன் இயேசுவின் பிறப்பின் சாட்சியாக பாலன் உருவ சிலை விசேடமாக அமைக்கப்பட்ட மாட்டு தொழுவத்தில் அருட்தந்தையினால் வைக்கப்பட்டதை தொடர்ந்து ஒளிவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.