சனசமூக நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு
வவுனியா பாலமோட்டை சனசமூக நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் சனசமூக நிலையத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
பாலமோட்டை வட்டார கிராமத்தில் உள்ளுராட்சி சபை தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கிராமத்திற்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் குறித்து ஒதுக்கப்பட்ட 10இலட்சம் ரூபா நிதியில் சனசமூக நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் குறூஸ், உதவிப் பொறுப்பாளர் ராஜன், சமளங்குளம் வட்டாரத்தின் தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் கார்த்தீபன், கிராம அபிவிருத்திச்சங்கம், மகளிர் அபிவிருத்திச்சங்கம், கிராம அலுவலகர், சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.