துரித கதியில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்!
நாட்டில் அடுத்துவரும் 10 மாதங்களில் பல அபிவிருத்தி திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் என வீடமைப்பு நிர்மாண மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனை நிறைவேற்றுவதற்கு மாநில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நிறைவேற்றும் பணிக்காக தங்கள் அர்ப்பணிப்பை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் கூறினார்.
காலை 8.30 am to 4pm மணிக்கு அல்லாமல் எதிர்காலத்தில் அனைத்து அதிகாரிகளும் 24 மணித்தியாலங்களில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
அத்தோடு அடுத்த 10 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் வரவுள்ள நிலையில், அனைத்து அதிகாரிகளும் 10 வருடங்களில் செய்ய வேண்டிய வேலைகளை 10 மாதங்களில் முடிக்க தயாராக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.