புதிய அமைச்சின் கடமையை பொறுப்பேற்றார் ரவி!
மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சில் தனது அமைச்சிற்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக நேற்று ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட அவர்,
“புதிய அமைச்சானது ஒரு புதிய அனுபவமும் ஒரு சவாலாகவும் காணப்படுகின்றது. இது ஒரு புதிய தொடக்கத்திற்கான நேரம்” என்றும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, இரண்டு வருடங்களின் பின்னர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
எனினும், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸூடன் தொடர்புகளை பேணி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.