புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு!
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதன்படி புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு,
ஹர்ஷ டி சில்வா – பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சர்
இவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர்கள்
ரஞ்சன் ராமநாயக்க – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
ஜே. சி. அலவத்துவள – உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
எரான் விக்ரமரத்ன – நிதி இராஜாங்க அமைச்சர்
அலி சாஹிர் மௌலானா – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
ருவன் விஜேவர்தன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரன் – கல்வி இராஜாங்க அமைச்சர்
நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார இராஜாங்க அமைச்சர்
பைசல் காசிம் – சுகாதார இராஜாங்க அமைச்சர்
அமீர் அலி – விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்
புத்திக பத்திரண – தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்
நளின் பண்டார – சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர்