அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
30 அமைச்சுக்களுக்கும் புதிய செயலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை தங்களுக்கான நியமன கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – ஹேமசிறி பெர்னாண்டோ
நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் – எஸ். ஹெட்டியாராச்சி
தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் , புனர்வாழ்வு , வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன்விருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் – சிவஞானசோதி
கல்வி அமைச்சின் செயலாளர் – பத்மசிறி ஜயமான்ன
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் – எஸ்.எம் மொஹமட்
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் – ஆர்.எம்.டி.பி. மீகஸ்முல்ல
பொதுநிர்வாக மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் – ஜே.ஜே. ரத்னசிறி
மின்சக்தி, சக்திவலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – கலாநிதி சுரேன் படகொட
போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் – எல்.ஜீ . ஜயம்பதி
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – நிஹால் ரூபசிங்ஹ
உள்ளக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் – கமல் பத்மசிறி
வௌிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் – ரவிநாத ஆரியசிங்க
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் – கே.பி பேர்னார்ட் வசந்த சில்வா
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் – ஜே.ஏ ரஞ்சித்
புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – ஏ.ஜீ.ஜி கித்சிறி
மகளிர் , சிறுவர் விவகாரம் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – எல்.டீ சேனாநாயக்க
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் – அநுர சேனாநாயக்க
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – பி.சுரேஷ்
தொழிலாளர் , தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர்- காமினி செனவிரத்ன
விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – கே.டி.எஸ்.ருவன் சந்திர ஆகியோரே ஜனாதிபதியிடமிருந்து நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டிருந்தனர்.