மங்களவை கடுமையாக திட்டிய மைத்திரி!
அமைச்சர் மங்கள சமரவீரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக திட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களின் பதவிகளில் எந்தவித மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி, ஊடக அமைச்சரிடம் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுவரையில் எவ்வித அமைச்சுக்குமான வர்த்தமானி வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக அதிகாரிகளை யாரையும் நீக்கவும் வேண்டாம் நியமிக்கவும் வேண்டாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்ததாக கிடைத்த தகவலுக்கு அமைய ஜனாதிபதியின் கோரிக்கை வெளியாகி உள்ளது.