நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது! மகிந்த கவலை!
நாட்டில் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் குறைப்பாடு காரணமாக மக்கள் கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மித்தெனிய சுமங்கள விகாரையில் நேற்று நடைபெற்ற சமய வைபவம ஒன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
மூன்று வேளை சாப்பிட முடியாமல், ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டு விட்டு பொழுதை கழிக்கும் அளவுக்கு நாட்டு மக்களின் வறுமை நிலை அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் வரி விதிப்புகளால் மக்கள் அன்றாடம் உணவை உட்கொள்ள முடியாது கஸ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சில வீடுகளில் ஒரு வேளை உணவாக மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு வருகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.