ஜப்பானில் நிலநடுக்கம் – 5.5 ஆக பதிவு!
ஜப்பானின் ஹோன்ஷூ தீவுப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கமென்று உணரப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஹோன்ஷூ தீவில் இன்று காலை ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து அந்நகர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் லேசாக குலுங்கியுள்ளதுடன், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சுனாமியில் 281 பேர் உயிரிழந்த நிலையில், இன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.