ஐக்கியதேசிய கட்சியில் ஒருபோதும் இணையமாட்டேன்!
ஐக்கியதேசிய கட்சியில் ஒருபோதும் இணையப்போவதில்லை என ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்ததிசநாயக்க தெரிவித்துள்ளார்
நான் ஒருபோதும் ஐக்கியதேசிய கட்சியில் இணையப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் புதிய நட்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள துமிந்ததிசநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தவேண்டும் என்பதே எப்போதும் எனது விருப்பம் அது அனைவரினதும் தாய்வீடு என தெரிவித்துள்ளார்.
வீடு அனைவரையும் அரவணைக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை விமர்சித்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்துகொண்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் புதிய கட்சியில் இணைந்து கொண்டது குறித்து தற்போது கேட்டால் அவர்கள் மௌனமாகயிருக்கின்றனர்,அவர்கள் தற்போது தாங்கள் ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள துமிந்த திசநாயக்க முழுநாடும் அவர்கள் வேறு கட்சியில் இணைத்து கொண்டதை நாடுபார்த்தது .நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.