ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!
60 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.