கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நாமல் பார்வையிட்டார்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜாபக்ச மற்றம் அங்கயன் இராமநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

கிளிநாச்சி பாரதிவித்தியாலயம் மற்றம் பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்ட அவர்கள் மக்களுடன் நெருக்கமாக கலந்துரையாடினர்.

காலை பாரதி வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த அவர்கள் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது மக்கள் தாம் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் எடுத்து கூறினர்.

தொடர்ந்து அங்கு நாமல் ராஜபக்ச முகாமில் உள்ளவர்களிற்காக தயாரிக்கப்பட்ட தேனீர் அருந்தினார். மக்களிற்கு போர்வைகள் இதன்போது அவர்களால் கையளிக்கப்பட்டது.

பின்னர் ஊடகங்களிற்கு அவர் கருத்து தெரிவித்த அதேவேளை அங்கயன் இராமநாதனும் கருத்து தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களை வைத்து தமது சுயநல அரசியலை செய்யாது, மக்களின் நிலைமையை உணரந்து உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமது அழைப்பின் பேரில் தென்னிலங்கையில் இருந்து நாமல் ராஜபக்ச இங்கு வருகை தந்ததாகவும், அவருடன் இணைந்து பலரும் மக்களிற்கான உதவி பொருட்களையும் எடுத்து வந்துள்ளதாகவும், அவை மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.

தொடர்ந்து கிளிநொச்சி பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கியுள்ள மக்களை அவர்கள் சந்தித்து நெருக்கமாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

இதன்போது அங்கு தங்கியுள்ளவர்களிற்காக போர்வைகளும் கையளிக்கப்பட்டதுடன், அங்கிருந்த சிறார்களிற்கு இனிப்பு பண்டங்களையும் வழங்கி சிறார்களுடன் நெருக்கமாக உரையாடியமை குறிப்பிடதக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net