கிளிநொச்சி வெள்ளத்தால் பதிக்கப்பட்டவர்களில் சில குடும்பங்கள் தொடர்ந்தும் முகாம்களில்

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பதிக்கப்பட்டவர்களில் சில குடும்பங்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான வானிலை காணப்படும் நிலையில் இன்று மக்கள் தமது இருப்பிடங்களை சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மருதநகரில் உள்ள 17 குடும்பங்கள் பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கியுள்ளனர்.

இவர்களிற்கான சமைத்த உணவுகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் இவர்கள் தமது வதிவிடங்களை சென்று பார்வையிட்டு துப்பரவு செய்யும் காட்சிகள் எமது கமெராவில் இவ்வாறு பதிவாகியது.

அவர்களின் வீடுகளிற்குள் வெள்ளம் சென்றுள்ளதுடன், வீடுகளும் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் தமது காணிகளை பார்வையிட்டதுடன், துப்பரவு செய்யும் காட்சிகளும் எமது கமெராவில் பதிவாகியது.

பல பகுதிகள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இதேவேளை நிலம் மோசமாக அரித்து சென்றுள்ளது.

தமது வீடுகள் இவ்வாறு சேதமடைந்துள்ள நிலையில் தம்மை எந்தவொரு அரசியல்வாதிகளும் வந்து பார்வையிடவில்லை எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net