சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்!
எம்பிலிப்பிட்டிய, வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற நபரொருவர் காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியொருவர் நீரில் மூழ்கிய போது, அவரை காப்பற்ற முயன்ற நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதுடையவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த நபரை தேடும் பணிகளில் பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.