ஜனதிபதியாகி 700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள்!
700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் 8 மாதங்களில், நாளொன்றுக்கு 5 பொய்கள் வீதம் 1,137 குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில், அமெரிக்காவில் இடைத்தேர்தல் நிகழ்ந்த சமயத்தில், 1,205 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை டிரம்ப் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2018, டிசம்பர் 20- ஆம் திகதியுடன், ஜனாதிபதி ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்று 700 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவர் இதுவரை 7,546 தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.