ஜனாதிபதியின் வவுனியா விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெறவிருந்த காணிப்பிணக்குகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருந்துள்ளது.

இந்நிலையில் அக்கலந்துரையாடல்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை பிரதேச செயலாளர்களை கொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள நான்கு பிரதேச செயலகங்களிலிருந்த காணிப்பிணக்குகள் நீண்டகாலமாக சீர் செய்யப்படவில்லை.

அத்துடன் வன இலகா திணைக்களத்தின் காணிகளில் மக்கள் குடியேற்றியுள்ளதை மீட்பது தொடர்பாகவும் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலைமைகளை சீர் செய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் காணிப்பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செலயகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் ஒன்றின் அடிப்படையில் இக்கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளர்களின் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net