தொடரும் சீரற்ற காலநிலை: ஒருவர் பலி! 74 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் தொடர்ந்தும் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 23265 குடும்பங்களைச் சேர்ந்த 74793 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு இவர்களில் 3698 குடும்பங்களைச் சேர்ந்த 11310 பேர் 39 இடைத்தங்கள் முகாம்களில் தங்வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 26 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 318 வீடுகன் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டமே பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் அனர்த்தம் காரணமாக 12118 குடும்பங்களைச் சேர்ந்த 39932 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 2465 குடும்பங்களைச் சேர்ந்த 7850 பேர் 24 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் வெள்ளத்தினால் 23 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 311 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6520 குடும்பங்களைச் சேர்ந்த 20737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 1200 குடும்பங்களைச் சேர்ந்த 3365 பேர் 13 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் வெள்ளத்தினால் 13 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இவ்வாறே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 23054 குடும்பங்களைச்சேர்ந்த 73851 பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் அனர்த்தம் காரணமாக 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கண்டி மாவட்டத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக 199 குடுப்பங்களைச்செர்ந்த 890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தளம் மாவட்டத்திலும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட. மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் பணியும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.