வஜிர அபேவர்தனவின் முடிவு வரவேற்க்கத்தக்கது!
ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்த தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமையை வரவேற்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் வஜிர அபேவர்தன வாய் மூலமாக தெரிவித்துள்ளதை நடைமுறையில் செய்வாரானால் அது வரவேற்கக் கூடிய விடயமாகும்.
அவ்வாறு தேர்தலை ஒரே தடவையில் நடத்தி முடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவும் தயாராகவே உள்ளது. தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டால் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் உரிய முறையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.