வவுனியா மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
வவுனியா பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரித்து உள்ளதுடன், குளத்தின் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் ஈரட்டை குளத்தின் வான் பாய்ந்து வருவதனாலும் பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.
19.4 அடியாக உள்ள பாவற்குளத்தின் நீர்மட்டம் தற்போது 18.3 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலை இருப்பதால் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைய வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக குளத்தின் கீழான பகுதிகளில் உள்ள பாவற்குளம், மீடியாபாம், கிறிஸ்தவ குளம், மெனிக்பாம் மக்கள் அவதானமாக இருக்கவும்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீரை வெளியேற்றுவது குறித்து நீர்ப்பாசன, மாவட்ட செயலக, அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் குளத்தின் வான் கதவுகளை பார்வையிட்டு அவதானித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.