ஆசிரியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட தயார்!
கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இம்முறை இடம்பெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் பிரச்சினையால் கணித பாடம் திருத்தும் பணிகளை கைவிட ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பரீட்சை விடைத்தாள்களின் திருத்தும் பணிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு பல முறை கோரியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.