இன்று முதல் குறைகிறது பஸ் கட்டணம்!
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை வாகனங்களின் கட்டணங்களை இன்று முதல் குறைப்பதற்கு அந்தந்த சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒரு லீட்டர் டீசலின் விலை 5 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவினாலும் அண்மையில் குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே இன்று முதல் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.