இன்று (26) கிரான்பாஸில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!
இன்று (26) காலை 8 மணியளவில் கிரான்பாஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹேனமுல்ல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தினேஷ் எரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.