ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை!

ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினராக இணைந்து கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்றுடன் 673ஆவது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிளை ஜெயவதனியினால் இன்று அவர்களது போராட்டக்களத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நேற்று வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்வைக்கப்பட்டு கருத்துக்களுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது,

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பினை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். அவர்கள் யார் என்ற விடயம் இன்று வரையில் எமக்குத் தெரியவில்லை. எமது போராட்டம் மிகவும் ஆதாரத்துடன் மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த காலங்களில் எம்மால் இடம்பெற்ற அனைத்துப் போராட்டங்களின் போதும் ஆதாரங்களுடனேயே மேற்கொண்டு வந்துள்ளோம்.

ஜனாதிபதியுடன் எமது பிள்ளைகள் நின்றிருந்த ஒரு ஆதாரத்தினை முன்வைத்தும் எமக்கு இன்று வரையில் சரியான ஒரு தீர்வு கிடைக்கவில்லை எங்களுடைய போராட்டங்களை வெளிநாடுகள் அனைத்தும் அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

24மணி நேரமாக இரவு பகலாக மழையிலும் இப்போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு எம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இவர்கள் யார்?
எமது போராட்டம் இரண்டு வருடங்களை கடக்கவுள்ளது இந்த அரசாங்கத்துடன் ஒத்துப்பேசிக்கொண்டு போகின்றார்கள்.

குறித்த தலைவி என்று சொல்லிக்கொள்பவர் இரண்டு ஒரு போராட்டங்களின்போது கலந்துகொண்டிருந்தவர் எனவே இவர்களின் நோக்கங்கள் மற்றும் இரகசியத்தகவல்கள் வெளியே வழங்கி வரப்பட்டுள்ளதால் நாங்கள் அவரை கொஞ்சம் ஒதுக்கி வைத்திருந்தோம்.

இவர்களை முன்னிறுத்தி எதனையும் மேற்கொள்ளவில்லை. சில பல பிரச்சினைகளள் ஏற்படுத்தி தானாகவே விலத்திக்கொண்டார்.

அவரின் காணாமல் போன பிள்ளையின் புகைப்படம் எமது பந்தலில் உள்ள பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் அவரின் பிள்ளைக்குத் துரோகம் இளைத்துள்ளார். இவர் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி கட்சியில் உள்ளுராட்சி தேர்தல் கேட்ட ஒருவர் ஒரு அரசியல் கட்சி சார்ந்து செயற்பட்டுள்ளார்.

அதில் தோல்வி அடைந்துள்ள நிலையில் தற்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி என்று சொல்லிக்கொள்கின்றார்.

எமக்குத் தெரியாது இவருக்கு தலைவிப்பதவி யார் வழங்கியது என்று வேறு யார் இவருக்கு ஒத்தாசையாக இருக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியாது.

இவர் அரசாங்கத்துடன் ஒத்து இணங்கிச் செல்லப்போகின்றார். எமக்கு ஒரு தீர்வு கிடைக்கின்ற நேரத்தில் இவரின் செயற்பாட்டினால் எமது போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காமலும் போகலாம்.

பல மாற்று இயக்கங்கள் எல்லாம் எமது பிள்ளைகள் உறவினர்கள் காணாமல்போவதற்கு ஆதாரமாகவே இருந்தது.

தற்போது இவரும் அக்கட்சியின் இணைந்துள்ளார். அவர்களின் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள பேரணியில் சிலவேளைகளில் குழப்பங்கள் ஏற்படும் நேர்மையாக இருக்கின்ற தமிழ் மக்கள் எவரும் இப்பேரணியில் கலந்துகொள்ளமாட்டார்கள்.

இதேவேளை அவர்களின் கலந்துரையாடலுக்கு நேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சென்றுள்ளது குறித்து உங்களது கருத்து என்ன என வினவியபோது,

அவர்களும் அரசாங்கத்துடன் ஒத்து இணங்கி செயற்படவேண்டும் என்று அவர் சார்பாக நிற்கின்றார்கள்.

சிவசக்தி ஆனந்தன் கடந்த வருடம் எங்களிடம் வந்து கேட்டார் இவ்வாறு இருந்து வேலையில்லை நாங்கள் பிரதான ஏ 9 வீதியை வழிமறித்துப் போராட்டம் மேற்கொள்வோம் என்று. அதற்கு நாங்கள் சொன்னோம் நீங்கள் சென்று மறியுங்கள் நாங்கள் உதவி செய்கின்றோம். என்று நீங்கள் அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் இருக்கின்றீர்கள். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீங்கள் தானே நீங்கள் 500, ஆயிரம் பேரை அழைத்துச் சென்று நொச்சிமோட்டைப்பாலத்திலிருந்து மறியுங்கள்.

நீங்கள் மறித்து போராட்டத்தினை செய்யுங்கள். ஒரு மணிநேரத்தின் பின்னர் நான் எமது தாய்மாரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் அங்கு வருகின்றோம். ஆனால் அதற்கு முதல் நான் எமது தாய்மாரை அழைத்துக்கொண்டு அங்கு செல்ல மாட்டேன்.

நீங்கள் அரசியல்வாதிகள் எப்பக்கம் வந்தும் கதை சொல்லுவீர்கள். நாங்கள் அவ்வாறில்லை. உங்களால் அதனை மறித்து போராட்டம் மேற்கொள்ளத் தகுதி இல்லை. எவ்வாறு அங்கு செல்கின்றார்.

சரி நாங்கள் அவரிடம் பல உதவிகள் பெற்றிருக்கலாம். ஆனால் அது அவர் செய்யவேண்டிய கடமை. அதனால் அவரை நாங்கள் ஒதுக்கிவைக்கவில்லை. அவரே எங்களிடம் வராமல் விட்டுவிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் இதற்குள் வருவதை நாங்கள் விரும்பலில்லை என்று தெரிவித்ததும் அவராகவே ஒதுக்கிக்கொண்டுள்ளார். அரசியலில் தேர்தல் கேட்டவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net